குட்ரிட்டன்ஸ் » தமிழ் » World
Monday, October 10, 2016, 16:48 [IST]
2016 ஆண்டிற்கான அமெரிக்காவில் உள்ள 400 பணக்காரர்கள் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 5 இந்திய வம்சாவளி பணக்காரர்களும் இடம் பெற்று உள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் எப்போதும் போல அமெரிக்காவைச் சேர்ந்த பில் கேட்ஸ் 23 ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
81 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து உள்ள பில் கேட்ஸ் பில் அண்ட் மெல்லிண்டா கேட்ஸ் ஃபைண்டேஷன் பெயரில் போலியோ, மலேரியா போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மிகப் பெரிய அறக்கட்டளை மூலம் உதவி செய்தும் வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ள ஐந்து இந்திய வம்சாவளி அமெரிக்க பணக்காரகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வாத்வானி
சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் வாத்வானி 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 222 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சென்ற வருடம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளதாக இருப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
சின்டெல் தேசாய்
2.5 பில்லியன் டாலருடன் 274 வது இடத்தில் உள்ள தேசாய் 1980 ஆம் ஆண்டு தனது அப்பார்ட்மெண்ட்டில் சிறியதாக இந்த நிறுவனத்தைத் துவங்கினார். இப்போது இந்த நிறுவனம் 950 மில்லியன் டாலர் வருவாயுடன் 24,000 ஊழியர்களுடன் உலகளவில் இயங்கி வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
கங்வால்
2.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 321 வது இடத்தில் உள்ளார். 63 வயதான கங்வாலும் ஐஐடியின் முன்னால் மானவர் ஆவார். இண்டெர் குளோப் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இண்டிகோ என்ற பெயரில் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கபூர்
2.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 335 வது இடத்தில் உள்ளார் கபூர். இரண்டு மருந்து நிறுவனங்களுக்குத் தலைவரான இவர் பிசிப்ஷன் மருந்துகள் மற்றும் இசிஸ் தெராபடிக்சின் போன்ற மருந்துகளை கேன்சர் நோயாளிகளுக்குத் தயாரித்துவருகின்றனர்.
ஸ்ரீராம்
2000 ஆம் ஆண்டு முதல், திரு ஸ்ரீராம் இளம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தனது ஷெர்ப்ளோ வென்சர்ஸ் மூலம் முதலீடு செய்துவருகின்றார்.
பேப்பர்லஸ் போஸ்ட், ஆன்லைன் கார்டு, வெப் மற்றும் மொபைல் ஆப் டெஸ்டிங், இன்மொபி போன்றவற்றை அளிக்கும் மொபைல் அட்வர்டைஸிங் கம்பெனி பொன்ற நிறுவனங்கள் இவரது பட்டியலில் உள்ளது.
2014ஆம் ஆண்டு மட்டும் 61 மில்லியன் டாலர்களைத் தங்களது இரண்டு மகள்கள் படிக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு ஆளித்துள்ளனர்.
பிற முக்கிய நிறுவனர்கள்
அமெசான்.காம் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 67 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஹேத்வே தலைமை செயல் அதிகாரி வாரன் பஃபெட் மூன்றாவது இடத்திலும், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் 55.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment