Monday, 11 March 2019

நாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆக

நாள்பட்ட ஆஸ்துமா குணம் ஆகும் !!!

மருந்து இல்லை மாத்திரைகள் இல்லை !!!

மந்திரம் இல்லை தந்திரம் இல்லை !!!

தினமும் நீங்கள் குளித்தால் போதும் !!!

நாங்கள் சொல்வது போல குளிக்க வேண்டும் !!!

ஒரு மருத்துவரின் பதிவு

நாட்பட்டஆஸ்துமா விற்கு. ...

பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். 

ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .

அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது.
.52 வயது ஆண். 

அவருக்கு ...
என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. 

ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன். 

அவரிடம் விசாரித்தேன்.
பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று. 

அதற்கு அவர்.

 அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார்.

 இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். .
அவரோ...
"உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.

கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார். 

அதாவது ..

.அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..
1) *அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி*.
2) *வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி*
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு  உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து, 
முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) *குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்*
இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு.

பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. 

அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது.

ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். .பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.

இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது.

நானும் நம்பிக்கையுடனும்,  வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத் 
தொடங்கினேன்..

ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். .

இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். .

இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. .நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். .

எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது..
தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை. 

எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன்.
தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக  வெளியே விட்டேன். .

ஆச்சரியம்  குளிக்கும் போது  மூக்கு வழி சுவாசம் எளிமையானது..

கடந்த ஆறு மாதமாக
இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்..

தற்போது  எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை .

இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது. 

இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. .

எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது..

எனது புரிதல். .

நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன். 

நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் ..

சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன். 

இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற  உண்மையை  
உணர்த்த உதவுகிறது

பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. .

சுருங்கும் அல்லது எதிர்வினை  தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ...

தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. .

உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது. 

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது. 

சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..

ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்துவது அவசியம்.

Wednesday, 6 March 2019

கோளறு பதிகம்

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

(எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும்
ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்துநிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி ,பொன்போலொளிரும் ஊமத்தைமலர்களாலான மாலைதரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால்,ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம்;
ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்;
ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை;
ஆறாவது விண்மீனான திருவாதிரை;
முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3.உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளி பொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித்தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கைநதியையும் கொன்றைமாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின்மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6.வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம்ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

7.செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின்மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8.வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின்மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9.பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின்மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேருமுதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

10.கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11.தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

Tuesday, 5 March 2019

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு...

மறைக்கப்பட்ட வரலாறு....
-----------------------------------
1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். 
மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க,

நேருவுக்கு குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....
(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,
"எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்"
என்று கூற,

உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். 
நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார். 

நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,
அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, 
இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்டைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்--இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.

அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். 

அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி, 
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"--  
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார். 

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..

இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.

நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம். 

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும்,
நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும், இரவில் மின்விளக்கு வெளிச்சத்தையும் காணுங்கள்....

பகிர்வு